வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரிசோதனை செய்யும் வாகனங்கள் தரமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையான வேலைத்திட்டம்
மேலும், வாகன புகைப்பரிசோதனை சான்றிதழை பெற்றுக்கொள்வதோடு, வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி போன்றவற்றையும் ஒரே இடத்தில் வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |