மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக 2000 மேற்பட்ட முறைப்பாடுகள்
கடந்த வருடம் (2023) மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஓ.டபிள்யூ.பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
“குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆயிரத்து இருநூறு பேரூந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சீர்திருத்தப் பயிற்சி
அத்துடன், அவர்கள் அதிகாரசபையால் சீர்திருத்தப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுக்கள்
மேலும், பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்காதது, மீதி பணத்தை தராதது, சோதனையின்றி பேருந்துகளை இயக்குவது, போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை இயக்குவது, பயணிகளை அநாகரீக வார்த்தைகளால் திட்டுவது, மெதுவாக ஓட்டுவது மற்றும் பல குற்றங்கள் என பேருந்து நடத்துனர்கள் மீது பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
பேருந்துகளில் ஊழியர்களால் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் 0112-860860 என்ற எண்ணிற்கு தெரிவிக்க முடியும்.” என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |