இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான மக்கள்: பாராமுகமாக செயற்படும் சர்வதேசம்
2009 ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கு சர்வதேசம் எந்த வித நீதி விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் (manikkavasagar ilampiraiyan) குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.பல்கலையில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், யுத்தத்தில் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களுக்கு இது வரையிலும் சர்வதேசம் எந்த ஒரு தீர்வுகளையும் முன்வைக்க வில்லை என விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் நல்லிணக்க விடயங்களை விசாரிப்பதாக கூறி சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது, அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |