அதிகளவான யானைகள் உயிரிழந்த வருடமாக 2022 - எண்ணிக்கையுடன் வெளியாகியுள்ள அறிக்கை!
கடந்த வருடங்களை காட்டிலும் 2022 ம் ஆண்டே இலங்கையில் அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, இலங்கை சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் போன்ற விடயங்களுடன் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை
அந்தவகையில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி மதம் முதல் டிசம்பர் 5 ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் உயிரிழந்த யானைகளின் மொத்த எண்ணிக்கை 395 ஆக உள்ளது.
குறித்த யானைகளின் உயிரிழப்பானது ஒரு வருடத்தில் இடம்பெற்ற அதிகளவான உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.
கடந்த வருடங்களின் ஒப்பீடு
கடந்த வருடங்களின் ஒப்பீடுகளின்படி, 2021ம் ஆண்டில் 375 யானைகளும், 2020 ம் ஆண்டில் 318 யானைகளும் 2019ம் ஆண்டில் 207 யானைகளும் இறந்துள்ளன.
அத்துடன், இலங்கையில் நாளாந்தம் ஒரு யானை இறப்பதாகவும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் யானை தாக்கி 127 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
