பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானோர் தொடர்பான தகவல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 62.9 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியிடப்பட்டநிலையில், இன்று(29) முதல் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தில் பாடசாலை அதிபர்களால் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி பெற்ற மாணவர்கள்
பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இப்பரீட்சைகளுக்கு 236, 035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 171,497 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
