உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
G.C.E.(A/L) Examination
By Vanan
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பா் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந் குமார் தெரிவித்துள்ளாா்.
இந்த ஆண்டு ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை நடைபெற்ற பரீட்சையில் 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 331,709 பேர் தோற்றினர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 2022 உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தடைப்பட்டு மே மாதம் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்தல் செயற்பாடு
பெபேறுகள் வெளியானதும் வெட்டுப்புள்ளிகளுக்கமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் அறிவித்துள்ளாா்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்