பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு!
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
Grade 05 Scholarship examination
By Kanna
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதி முதல் டிசம்பர் 23ம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையான காலப் பகுதியில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
