2023 இல் இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்- விஜித ஹேரத் சூளுரை
Vijitha Herath
Janatha Vimukthi Peramuna
SL Protest
By Sumithiran
2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் பி.எம்.விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி வட்டாரம், வரகாவ பல்லேகமவில் நேற்று (31) இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மக்களைத் திரட்டி போராட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தத் தேர்தலுக்காக மக்களைத் திரட்டி போராடுவோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஜே.வி.பி.க்கு சவால் விடுக்கும் அனைவரது சவால்களையும் முறியடித்து வெற்றியை பெறுவாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.