2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Grade 05 Scholarship examination
By Dilakshan
2023 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் 434 மத்திய நிலையங்களில் குறித்த விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றமையால் அப்பகுதியில் உள்ள புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளின் விடைத்தாள் திருத்தப்பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகள்
அத்தோடு, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி