மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அசோக் அபேசிங்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அதிபர் தேர்தலுக்காக மக்களுக்கு இலஞ்சம் கொடுப்பதற்காக அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை பத்து வீதத்தால் குறைக்கவுள்ளதாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை
“அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் எரிபொருள் விலையை ஓரளவு குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
அஸ்வெசும நிதியம்
அஸ்வெசும் வழங்க உலக வங்கியால் 75 மில்லியன் வழங்கப்பட்டது. 20 லட்சம் பேருக்கு வழங்க வேண்டியிருந்தாலும், தற்போது 14-15 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்தத் தொகையை வழங்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அதன்படி, முதல் 4 லட்சம் குடும்பங்களுக்கு 2500 ரூபாயும், இரண்டாவது 4 லட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபாயும், மூன்றாவது 4 லட்சம் குடும்பங்களுக்கு 8500 ரூபாயும், கடைசி 4 லட்சம் குடும்பங்களுக்கு 15,000 ரூபாயும் வழங்க திட்டமிடப்பட்டது.
அடுத்த வருடம் தேர்தல் வருடம் என்பதால் மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு இலஞ்சம் வழங்குமாறு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |