தமிழ் மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழரசுக் கட்சி தலைமைகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தமிழரசு கட்சியில் இருக்கின்ற சில தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களை பொது வழியில் கூறி எமது மக்களை திசை திருப்பி வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா (Markandu Natarasa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறினேசனின் (Chirinesana) இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பரப்புக்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய காலகட்டத்தில் தமிழ் வேட்பாளர் என்பது நிச்சயமாக அசியமான ஒரு விடயம்.
தற்போது தலைவர்களை வீடு தேடிச் சென்று எமது பொது வேட்பாளரைச் சந்திக்கின்ற அளவுக்கு அது வெற்றியளித்து இருக்கின்றது.
இந்நிலையில் எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் பல அபிவிருத்தித்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைகூட வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய தலைப்பிலே ஒரு வேட்பாளராக போட்டியிடுகின்ற நபருக்கு வாக்களிப்பதன் மூலம் உண்மையிலே பிரிந்து நிற்கின்ற தமிழ் மக்களை தமிழ் தேசிய பரப்புக்கள் கொண்டுவர முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |