2024 - நாடாளுமன்றத் தேர்தல்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கைமாறும் வேட்பாளர்களின் சொத்து அறிக்கைகள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமர்ப்பித்துள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்பு விளக்க அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்( Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த அறிக்கைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கையாளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேட்பாளர்களின் சொத்து அறிக்கைகள்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தனது இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்ய உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், அதிக வருமானம் பெற்று இதுவரை வருமான வரி செலுத்தாதவர்களிடம் இருந்து நிலுவைத் தொகையுடன் வரியை வசூலிக்க இறைவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |