சிஎஸ்கேவிற்கு தலைவலியாக மாறியுள்ள ஆர்சிபி: பிளே ஓப் கனவு தடைப்படுமா!
ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 அணிகள் பிளே ஓப் சுற்றிற்கு தகுதிபெறாமல் வெளியேறிவிட்டன.
மேலும், பிளே ஓப் சுற்றிற்காக கொல்கத்தா, அணி ஏற்கனவே தகுதிப்பெற்ற நிலையில் நேற்றைய(15) போட்டியில் டெல்லி(Delhi Capitals) அணி வென்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) அணியும் தகுதிப்பெற்றுள்ளது.
இந்நிலையில், மிகுதி இரண்டு இடங்களுக்கு எந்த அணி தகுதிப்பெறும் என தெரியாத நிலையில், முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்ற ஆர்சிபி(Rcb) அணி அடுத்த 5 போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்றுள்ளது.
சிஎஸ்கேவின் தலைவலி
இதனால், ஆர்சிபி அணி 3 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று +0.387 நிகர ஓட்டவிகிதத்துடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
எனவே இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(Chennai Super Kings) முதல் 13 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்று +0.528 நிகர ஓட்டவிகிதத்துடன் உள்ளது.
ஏனேனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி பிளே ஆப் சுற்றின் 4ஆவது இடத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
எனவே, கடைசி போட்டியில் ஆர்சிபியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றால், இரு அணிகளும் 14 புள்ளிகளுடன் இருக்கும். இரு அணிகளின் நிகர ஓட்டவிகிதமும் ஒரேமாதிரியாக இருப்பது சிஎஸ்கேவுக்கு பிரச்சினையாக இருக்கிறது.
பிளே ஓப் சுற்று
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு எதிரான கடைசி போட்டியில், ஆர்சிபி அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ, சிஎஸ்கேவை 5ஆவது இடத்தில் தள்ளி, ஆர்சிபி அணி 4ஆவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
மேலும், நேற்றைய ஆட்டத்தில் லக்னோவுக்கு(Lucknow Super Giants) எதிராக டெல்லி வென்றுவிட்டதால், இந்த அணிகளால் 14 புள்ளிகள் வரை மட்டுமே எட்ட முடியும்.
நிகர ஓட்டவிகிதமும் மைனஸில் உள்ளதால் சிஎஸ்கே, ஆர்சிபி இடையிலான போட்டியில் வெல்லும் அணியே 4ஆவது இடத்தை பிடிக்கும்.
சன் ரைசர்ஸ் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னமும் 2 போட்டிகள் எஞ்சியிருப்பதால், அந்த அணி 3ஆவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |