தோனியின் விருதை ருதுராஜ் வாங்கியது ஏன்! காரணம் இதுதான்..
தோனிக்கு(MS Dhoni) அளிக்கப்பட்ட விருதை அணித்தலைவர் ருதுராஜ்(Ruturaj Gaikwad) வாங்கி சென்றது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம்(10) ஆம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) மற்றும் குஜராத் டைட்டன்ஸ்(Gujarat Titans) அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்கள் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டேரல் மிட்சல் 34 பந்துகளில் 63 ஓட்டங்களையும், மொயின் அலி 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
இறுதியில் வந்த தோனி, ஓட்ட விகிதத்தை( run rate) மனதில் வைத்து 11 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 26 ஓட்டங்களை சேர்த்தார்.
இரசிகர்களிடையே ஆச்சரியம்
அதிலும் ரஷீத் கான்( Rashid Khan )பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை தோனி விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை அளித்தது.
இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் நிகர ஓட்ட விகிதம் +491 என்ற நிலையில் உள்ளது.
எனினும் போட்டியில் தோல்வியடைந்ததால் அடுத்ததாக சிஎஸ்கே அணி விளையாட உள்ள ராஜஸ்தான்(Rajasthan Royals) மற்றும் ஆர்சிபி(Royal Challengers Bengaluru) அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்றாலே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் நிலை உருவாகியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்
சிஎஸ்கே அணியின் புதிய அணித்தலைவரான ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புக்கு வந்த முதல் சீசனிலேயே, சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் இருந்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ருதுராஜ் கெய்க்வாடை முன்னிறுத்தி வருகிறார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ஓட்டங்கள் சேர்த்ததற்காக எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருது தோனிக்கு அறிவிக்கப்பட்ட போது இந்த விருதை வாங்க தோனி வரவில்லை.
தோனிக்கு பிறகு
அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் வாங்கினார். அப்போது வர்ணனையில் இருந்த ஹர்ஷா போக்லே,(Harsha Bhogle ) தோனியின் இடத்தில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அந்த விருதை பெறுகிறார்.
தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியிலும் தோனி இடத்தில் ருதுராஜ் இருக்கிறார் என்று சொல்ல, அகமதாபாத்(Ahmedabad) மைதானத்தில் இரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.
மேலும், அவர் காலில் ஏற்பட்டுள்ள காயம் தான் காரணமாகவே தோனி விருது வாங்க வரவில்லை என கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |