2024இல் பாரியளவில் உயரப்போகும் பொருட்களின் விலைகள்
இலங்கையில் எதிர்வரும் ஆண்டில் (2024) பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார்.
அரசு மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பாதீட்டு ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது.
72 சதவீத மறைமுக வரி
அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது, விற்பனையாளர்கள் நுகர்வோரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்கவே முயற்சிப்பார்கள்.
எனவே இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரிப்பு
அரிசி, மாவு, சர்க்கரை, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 72 சதவீதம் உயரும்.
பொது மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும் என பேராசிரியர் அமிந்த மெத்சிலா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |