பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு : நன்மையடையப்போகும் ராசிக்காரர்கள்.....
நாளை பிறக்கவுள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டில் மூன்று கிரங்களின் மாற்றங்கள் இருக்கப் போகின்றன. இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
கிரக நிலை மாற்றங்களினால் நாட்டில் ஆட்சி மாற்றம், இயற்கை வளங்கள் அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் உற்பத்தி உயர்வு போன்ற பல மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் வெற்றிகளை வழங்கும் ஆண்டாக பார்க்கப்படும் விசுவாவசு தமிழ் புத்தாண்டு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கார்களுக்கும் எப்படி அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ராகு பெயர்ச்சி வருகிறது. இந்த விசுவாவசு ஆண்டில் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்.
பொருளாதார நிலை மேம்படும், ஆண்டின் இறுதியில் குருபெயர்ச்சிக்கு பிறகு எல்லா வழிகளிலும் வெற்றியே கிட்டும்.
கல்யாண கனவு நிறைவேறும், குடும்பத்தில் சிக்கல்கள் அகலும், வெளிநாட்டு பயணங்களுக்கான யோகமும் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு தொடக்கம் அற்புதமாக இருக்கும். பொருளாதார திருப்தி, தொழில் முன்னேற்றம், சுயதொழிலில் இலாபம், உயர்பதவி வாய்ப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை தொடரும். முன்னேற்ற பாதையிலேயே பயணிப்பீர்கள்.
மிதுனம்
குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது படுவதால் தாய் வழி ஆதரவு உண்டு.
வாகனம் வாங்குவீர்கள், பதவி மற்றும் ஊதியத்தில் உயர்வு உண்டு, குடும்ப உறவுகளில் மேம்பாடு, கல்யாண வாய்ப்பு கைகூடும்.
கடகம்
அஷ்டம சனி காரணமாக இவ்வாண்டு நீங்கள் எதிலும் பொறுமை கடைபிடிப்பது நல்லது. வீண் செலவுகள், விரயம் அதிகமாகும்.
முன்னேற்ற பாதையில் பயணிக்க முயற்சித்தால் இரண்டு அடி பின்நோக்கி செல்வீர்கள். வருடத்தின் பிற்பாதியில் அற்புதமான வளர்ச்சி காண்பீர்கள். ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வீடு, இடம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு. அலுவலக பணியிக் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். குடும்பம் முன்னேற்ற பாதையில் பயணிக்கும்.
கன்னி
இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும், நினைத்தது நடக்கும், செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும், படிப்படியான தொழில் முன்னேற்றம் இருக்கும்.
குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சர்ப்ப தோஷம் இருந்தால் பரிகாரம் செய்யவும்.
துலாம்
விசுவாவசு வருடம் உங்கள் ராசியில் தான் பிறக்கிறது. எந்த காரியத்தை செய்ய நினைத்தலும் அதை தாராளமாக தொடரலாம்.
ஆரோக்கிய பிரச்னைகள் அகலும். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். பதவி மாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வெற்றிக்கனியை எட்டி பிடிக்கும் ஆண்டாகும். தேர்ந்தெடுக்கும் களத்தில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
கைகளில் பணம் புரளும், புகழ் உயரும், கல்யாண கனவு நினைவாகும், தொழில் சிறக்கும், ஆரோக்கிய தொல்லைகள் அகலும்.
தனுசு
தமிழ் வருடத்தின் இறுதியில் தனுசு ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வீண் பழிக்கு ஆளாகாதீர்கள், உறவினர்களிடம் பகையை வளர்க்காதீர்கள், வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
எனினும் உங்களுக்கு சுபகாரியங்கள் நடக்கும், வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். இந்த வருடம் எந்த செயலிலும் பொறுமை காக்கவும்.
மகரம்
இந்த ஆண்டு முழுவதும் மிகுந்த நன்மைகள் நடக்கப் போகின்றன. ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு அற்புதங்கள் நிகழும். பொருளாதார திருப்தி அடைவீர்கள். வீடு வாங்கும் கனவு படிப்படியாக நிறைவேறும்.
கும்பம்
அனைத்து கிரங்களின் பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மையையே வழங்கும். கடந்த அஆண்டில் நிறைவேறாத காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கை தேவை அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு பெற்றோர் வழியில் உதவி உண்டு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பெரிய வட்டத்தில் நட்புறவு ஏற்படும், தொழில் முன்னேற்றம் காண்பீர்கள், பதவி உயர்வு உண்டு, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், புதிய சொத்துகள் வாங்குவீர்காள். ஜென்ம சனி பற்றி கவலைப்படாதீர்கள்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
