2026 FIFA உலகக் கோப்பை! கனேடிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
2026 FIFA உலகக் கோப்பையை இலக்காகக் கொண்ட விசா மோசடிகள் குறித்து கனடா அரசு எச்சரித்துள்ளது.
2026 உலகக் கோப்பைக்கு "FIFA விசா" எனப்படும் சிறப்பு விசா அல்லது எந்த சிறப்பு சுற்றுலா விசாவும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வழங்கப்படும் சுற்றுலா விசாக்களை கனடாவில் வேலைவாய்ப்பு அல்லது நிரந்தர குடியிருப்புக்காகப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
FIFA உலகக் கோப்பை 2026 போட்டியில் ரசிகராக கலந்து கொள்ள கனடாவுக்கு வர விரும்பினால், நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாக கனடாவுக்குள் நுழைவீர்கள் என்று கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

Image Credit: Global News
விசேட 2026 FIFA உலகக் கோப்பை விசா எதுவும் இல்லை, ஆனால் கனடாவுக்குள் நுழைய பார்வையாளர் விசா அல்லது மின்னணு பயண அங்கீகாரம் (eTA) ஆகியவை தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கனடாவுக்குள் நுழைவு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கும் குடியேற்ற முகவர்கள் குறித்து பொதுமக்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
விசா விண்ணப்பம்
விசா அல்லது மின்னணு பயண அனுமதி (eTA) வழங்கப்படுவதை யாராலும் உறுதி செய்ய முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

“உங்கள் விசா விண்ணப்பத்தை ஒரு பிரதிநிதி நிரப்பினாலும், அதில் உள்ள அனைத்து தகவல்களுக்கும் நீங்கள் தான் பொறுப்பாளி.சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் தவறான தகவல்கள் இருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது,” என கனடா அரசு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது: https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/campaigns/soccer-2026.html
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |