நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரத்தை உருவாக்குங்கள் பின் 21வது திருத்தம் குறித்து பேசலாம்!

Sri Lanka Podujana Peramuna 21st Amendment Sri Lankan political crisis
By Kanna May 26, 2022 01:55 PM GMT
Report

முதலில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வீதியில் செல்லவும் சிந்திக்கவும் சூழலை உருவாக்குங்கள். அப்போது நாம் அரசியலமைப்புத் திருத்தங்கள் பற்றி என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரத்தை உருவாக்குங்கள் பின் 21வது திருத்தம் குறித்து பேசலாம்! | 21 Amendment Ranil Sri Lanka Political Crisis

குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்து நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவும் அரச தலைவராக பதவிக்கு வருவதை தடுப்பதற்காகவும் அரசியலமைப்புத் திருத்தங்களை உருவாக்கக் கூடாது. இப்படியான நோக்கத்தை கொண்டு உலகில் எந்த நாடுகளும் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வருவதில்லை.

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முன்னர் பொதுஜன பெரமுன அதனை ஆராய்ந்து, மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, புதிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தது.

பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவது, அரச உயர் பதவிகளை வகிப்பது இரத்துச் செய்யப்பட்டது.

இதனையடுத்து 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான தடைகள் நீக்கப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்டுள்ள பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசித்துள்ள 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை தடுக்கும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த ஷரத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான வரைவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

21 வது திருத்தச் சட்டம் சர்வதேசத்தின் தலையீடு என்ற சந்தேகம்

இந்த நிலையில், 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஆரம்பம் மற்றும் அதன் குறிக்கோள் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்வதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு இறுதியில் ஆதரவளிக்க போவதில்லை எனக் கூற மாட்டோம். முதலில் நாட்டுக்காக சரியானதை செய்ய கலந்துரையாடக் கூடிய சூழலை ஏற்படுத்துவதே முதல் தேவை.

21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கடந்த 23 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டதுடன் பின்னர் அதன் பிரதிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன" எனக் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்