நைஜீரியாவில் 21 மாடிக் கட்டடம் விழுந்து நொறுங்கியதில் பலர் பலி - தொடரும் தேடுதல் பணிகள்
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 36 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நைஜீரியாவின் லகோஸ் மாகாணம் இயோகி மாவட்டத்தில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்னர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.