கண் நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
நாட்டிலுள்ள கண் நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் 'பிரெட்னிசோலோன்' (Prednisolone) கண் திரவம் தரம் குறைந்ததாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் திரவத்தின் 21510 குப்பிகள் தரம் குறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) குறிப்பிடுகின்றார்.
குறித்த கண் திரவத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தேசிய கண் வைத்தியசாலையின் இரு நோயாளிகள் முழுமையாக பார்வையற்றவர்களாகியதாக வைத்திய நிபுணர் வைத்தியர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அங்கவீனமுற்ற நோயாளர்கள்
நுவரெலியா (Nuwara Eliya) பொது வைத்தியசாலையின் சுமார் பதினைந்து நோயாளிகள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த பாரதூரமான எதிர்விளைவுகள் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும், அங்கவீனமுற்ற நோயாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
எனவே தற்போதைய சுகாதார அமைச்சரும், செயலாளரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |