நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரம்: ரணிலிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena), கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் கோரிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை கையளித்துள்ளார்.
அத்துடன், குறித்த கடித்தத்திற்கு அதிபரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
வரியில்லா வாகன உரிமம் கோரி இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாகன அனுமதிப்பத்திரம்
எவ்வாறாயினும், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதை ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர்களுக்கான வரியில்லா உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் நாடாளுமன்ற சபை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |