கோட்டாபயவின் அதிகாரத்தை குறைக்கும் சட்டதிருத்தம் சபாநாயகரிடம் - சஜித் தரப்பு அதிரடி
srilanka
parliament
speaker
21st-amendment
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டம் நாளையதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகரிடம் கையளிக்கப்பட உள்ளது.
21வது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் தயார் என அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்ததையடுத்து, நாட்டுக்கு நன்மை பயக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்காக அரசியலமைப்பு சட்ட நிபுணர்களின் துணையுடன் இரண்டு நாட்களுக்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி