தந்தையின் வெளியேற்றம் மகன் நாமல் வெளியிட்ட பதிவு
மகிந்த ராஜபக்ச விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விடைபெறுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, 'X' கணக்கில் ஒரு குறிப்பை இட்டுள்ளார்.
தனது தந்தை எல்லாம் தொடங்கிய இடத்திற்குத் திரும்பிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான பலம்
உண்மையான பலம் பதவிகள் அல்லது சலுகைகளிலிருந்து அல்ல, மக்களின் அன்பிலிருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Today, my father @PresRajapaksa leaves the official residence in Colombo and returns to Tangalle, the place where it all began. A reminder that true strength comes from our roots, the love of the people, not positions or privileges. #BackToTangalle pic.twitter.com/56VpVETrnn
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (11) விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு வந்தார்.
சலுகையை இழந்தார்
'ஜனாதிபதிகள் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டத்தின்' விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய பின்னர் இது நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வரை உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தினார், ஆனால் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின்படி, அவரும் அந்தச் சலுகையை இழந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
