2025இல் நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்...23 பேர் பலி
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெலிகம, கல்கிஸ்ஸை, அஹுங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொடை, மித்தெனிய, புதுக்கடை, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொட, தெவுந்தர உள்ளிட்ட பல காவல்துறை பிரிவுகளில் இந்த துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரண்டு சம்பவங்கள் நீதிமன்றத்திற்குள்ளும், நீதிமன்றத்திற்கு வெளியேயும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் மக்களால் பெரிதும் பேசப்பட்டது.
அதன்படி, ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த இரண்டு பேரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச்சூடு
மேலும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டபோது சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
