ஹெரோயினுடன் 22 வயதுடைய இளைஞன் கைது..! யாழ் வட்டுக்கோட்டையில் சம்பவம்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கைது
200 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
17 வயதுச் சிறுவன் கைது
இதுவேளை, வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து, 5 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் 17 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவன் இன்றையதினம் யாழ். உச்ச நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை அவனை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி