அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட வரைவு பிரச்சினைக்குரியது - திஸ்ஸ அத்தநாயக்க
சட்ட வரைவு பிரச்சினைக்குரியது
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட வரைவு பிரச்சினைக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 19ஆவது அரசியலமைப்பை ஒத்திருந்தால் மாத்திரமே தமது தரப்பு அதற்கு ஆதரவளிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 22ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ள சில யோசனைகள் தொடர்பில் கருத்துக்கள் கேட்கப்படவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
இறுதித் தீர்மானம்
இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் அந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிகரான திருத்தத்தையே எதிர்கட்சிகள் எப்போதும் கோருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உத்தேச திருத்தத்தில் முன்னைய திருத்தத்தின் பல சரத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.