சிறிலங்கா அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்துக்கு அங்கீகாரம்
சிறிலங்கா அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக ஒரு வாக்கு மாத்திரம் பதிவாகியிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர இதற்கு எதிராக வாக்களித்தார்.
178 மேலதிக வாக்கு
இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்றாம் வாசிப்பின்பின் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இது தொடர்பான விவாதங்கள் நேற்றும் இன்றும் இடம்பெற்றிருந்தது.
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
