22வது அரசியலமைப்பு திருத்தம் : பொது வாக்கெடுப்பு நடத்த தயார் : அரசாங்கம் அறிவிப்பு
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தால், பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக உள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயதிஸ்ஸ, செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உச்ச நீதிமன்றதொடர அரசு தயாராக இருப்பதாகக் கூறினார்.
பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் முற்றிலும் பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், மக்களின் சார்பாகத் தொடங்கப்பட்ட சீர்திருத்தப் பணிகளை அரசு தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டால், அதற்கேற்ப நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம். பொது வாக்கெடுப்பு தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |