122 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்த்தப்பட்ட சாதனை
இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கேப்டவுணில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டமையானது 122 வருடங்களுக்கு பின்னர் நிகழ்த்தப்பட்ட சாதனையாக கருதப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 55 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் மொகமட் சிராஜ் 15 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
கடகடவென சரிந்த விக்கெட்டுகள்
பதிலுக்கு தனது முதல் இனிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை கண்டபோதிலும் பின்னர் 153 ற்கு நான்கு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து பின்னர் ஒரு ஓட்டம் கூட எடுக்க முடியாமல் மிகுதி ஆறு விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் தனது இரண்டாவது இனிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி ஆட்டநேரம் முடிவடையும்போது 62 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
1902 ற்கு பின்னர்
இதன்படி 1902ஆம் ஆண்டுக்கு பினர் முதல் நாளில் 23 விக்கெட்டுகளை இழந்திருக்கும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்த இரண்டாவது போட்டியாக மாறியுள்ளது.
1902ம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் நாள் டெஸ்ட் போட்டியில் 25 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், இன்றைய போட்டியில் 23 விக்கெட்டுகள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |