கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட வரிசையில் மக்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு (Department of Immigration and Emigration) முன்பாக அண்மைய நாட்களாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியிருந்தது.
அதிகாலை முதலே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், பலர் அதிகாலை நான்கு மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.
இதையடுத்து இன்று முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் 24 மணி நேரமும் இடம்பெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதற்கு ஏற்றவகையில் தேவையான பணியாளர்களை சுழற்சி முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று இரவு முதல் பத்தரமுல்ல பகுதிக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 20 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்