இலங்கையில் நான்கு இலட்சத்தை நெருங்கும் தங்க விலை
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் நேற்று முன்தினம் (25) காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1800 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இன்று (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்