கெஹலியவின் வழக்கு! தீயில் கருகிய முக்கிய சாட்சியங்கள் - உடன் விசாரணைக்கு அழைப்பு

Keheliya Rambukwella Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak Apr 27, 2026 09:11 AM GMT
Report

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தரமற்ற மருந்து விநியோகம் குறித்த சர்ச்சைக்குரிய வழக்குடன் தொடர்புடைய மருந்து விநியோக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலை ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தினால் வழக்கிற்குத் தேவையான முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இது குறித்து கருத்து தெரிவிக்கையில், குறித்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து மாதிரிகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் இந்தக் களஞ்சியசாலையிலேயே வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! தேடப்பட்டு வந்த முதியவர் சிக்கினார்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! தேடப்பட்டு வந்த முதியவர் சிக்கினார்

உடனடி விசாரணை

மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு இந்த ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கெஹலியவின் வழக்கு! தீயில் கருகிய முக்கிய சாட்சியங்கள் - உடன் விசாரணைக்கு அழைப்பு | Keheliya Fake Medicine Case Witness Destruction

அதன்படி, இந்தத் தீ விபத்து தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது ஆதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

திட்டமிட்ட நடவடிக்கை

மருத்துவ வழங்கல் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளை இந்த ஆவணங்களின் இழப்பு கடுமையாகப் பாதிக்கக்கூடும் எனவும், நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையாக இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கெஹலியவின் வழக்கு! தீயில் கருகிய முக்கிய சாட்சியங்கள் - உடன் விசாரணைக்கு அழைப்பு | Keheliya Fake Medicine Case Witness Destruction

எனவே, தாமதமின்றி இது குறித்த முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்

பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்

போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள்: காவி உடையில் மோசமான செயல்: மகாநாயக்க தேரர்கள் சீற்றம்

போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள்: காவி உடையில் மோசமான செயல்: மகாநாயக்க தேரர்கள் சீற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி