பதவி விலகும் ஷம்மி சில்வா! சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர்
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சுமார் ஏழு வருடங்களாக அவர் வகித்து வந்த பதவி முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
புதிய இடைக்காலத் தலைவர்
2019 ஆம் ஆண்டு பெப்ரவரியில் முதன்முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றுத் தொடர்ந்து இப்பதவியில் நீடித்து வந்தார்.

இந்நிலையில், ஷம்மி சில்வா பதவி விலகியதைத் தொடர்ந்து, சிறிலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |