மகிந்த தரப்பிற்கு பேரதிர்ச்சி : சஜித்துடன் இணையவுள்ள பெருமளவு எம்.பிக்கள்
SJB
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு இந்த குழுவினர் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாகவும் அவர் கூறினார்.
கூட்டு எதிர்க்கட்சியாக அரசியல் கூட்டமைப்பாக
இந்த குழுவுடன் கூட்டு எதிர்க்கட்சியாகவும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டமைப்பாகவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கூட்டணியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அதிபர் தேர்தலில் முன்னிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்