2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
Sri Lanka
Ceylon Teachers Service Union
Education
By Shalini Balachandran
மேல் மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக 2500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொக்குவிதான தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தக் குழு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடங்கள்
அதன்படி இங்கு ஆரம்பக்கல்வி, கலை, வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் மற்றும் பொதுக் கல்விப் பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் இன்னும் 2000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்