அரசாங்கத்துக்கு போதிய அறிவில்லை – சாடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் நலனுக்கான ஆட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் (Kurunegala) - கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை விதைக்கும் காலம்
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை.
இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40சதவீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 25,000 ரூபாய் முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை.
தற்போது, நெல்லை விதைக்கும் காலம் என்பதால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
பேச்சுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடுகள்
காலங்களில் அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்ட விடயங்கள் இன்று சாத்தியமில்லாது போயுள்ளன.
பேச்சுக்கும் செயலுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றமை தெளிவாகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |