வெள்ளவத்தையில் நடந்த அதிரடி சுற்றிவளைப்பு - சிக்கிய நபர்கள்
கொழும்பு (Colombo) - வெள்ளவத்தை பகுதியில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (15.12.2024) வெள்ளவத்தை (Wellawatte) காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொலிங்வூட் மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தொகை பணம்
சந்தேக நபரிடமிருந்து 36 கிராம் கொக்கெய்ன் 203 கிராம் குஷ் போதைப் பொருட்கள் போதைப்பொருள்.
மற்றும் கடத்தலின் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணம் 5 கையடக்கத் தொலைபேசிகள் பணம் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கொலிங்வூட் மாவத்தை பகுதியில் 3 கிராம் 600 மில்லி கிராம் குஷ் போதைப் பொருளுடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களைச் சேர்ந்த 24, 25 வயதுடையவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் வெள்ளவத்தை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |