அதிகாலைவேளை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் : 26 பாலஸ்தீனர்கள் படுகொலை (காணொளி)
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
இன்று(சனிக்கிழமை) அதிகாலைவேளை இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அஸ் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனூஸ் என்ற மக்களின் குடியிருப்பு பகுதியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவானோர் குழந்தைகள்
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெருமளவானோர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
⭕شاهد..اللحظات الأولى لقصف الاحتلال مبنى في مخيم بلاطة شرق نابلس ما ادى لارتقاء 5 شهداء pic.twitter.com/m3uGp75qKB
— إذاعة الأقصى - عاجل (@Alaqsavoice_Brk) November 17, 2023
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நப்லஸுக்கு கிழக்கே பலாடா அகதிகள் முகாமில் உள்ள ஃபதா இயக்கத்தின் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 16 மணி நேரம் முன்