தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : முதலிடம் பிடித்த மாணவர்கள்
வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளிவந்துள்ளது.
இதன்படிஅநுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவங்க ஹன்ச ராஜா பொன்சேகா என்ற மாணவன் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று வெற்றியீட்டியுள்ளார். அவர் 198 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
அநுராதபுரத்தில் முதலிடம் பிடித்த மாணவன்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தாதியான நிர்மலா பிரியங்கனி மற்றும் கட்டுநாயக்க விமானப்படை முகாமில் கடமையாற்றும் விமானப்படை அதிகாரி ஆகியோரின் குடும்பத்தில் நவங்க ஒரே பிள்ளையாவார்.
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நாட்டிலேயே முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவை என பாடசாலை அதிபர் எம்.அஜித் அமரவீர சில்வா தெரிவித்தார்.
வகுப்பு ஆசிரியர் டபிள்யூ.எம். சமிந்த குமார வீரசிங்க, நவங்க பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கினார். டொக்டராக வேண்டும் என்பதே தனது வாழ்க்கையில் இலட்சியம் என மாணவன் நவங்கா தெரிவித்தார்.
பதுளை மாணவி
இதேவேளை பதுளை விஹாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி W.M.துலினி சாந்தினி என்ற மாணவி 198 புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பதுளை ஸ்பிரிங்வேலி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட துலினி சாந்தினியின், தாயார் பொறியியலாளர் மற்றும் தந்தை வர்த்தகராவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
