திருகோணமலை - கிளிவெட்டி குமாரபுரம் படுகொலையின் 26ஆவது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு
திருகோணமலை - கிளிவெட்டி குமாரபுரம் படுகொலையின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலைகளுக்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில், நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் 1996 பெப்ரவரி 11 ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் 9 பெண்கள்,12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 25 பேர் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர்.
இதனை நினைவு கூருமுகமாக அப்பகுதி மக்கள், குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றில் வருடாவருடம் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வருடமும் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் ஒன்று கூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
