தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம்

Tamils Jaffna Sri Lanka
By Shalini Balachandran Jun 10, 2025 10:22 AM GMT
Report
🛑 புதிய இணைப்பு 

யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தற்போது வரை (பிற்பகல் 3 மணி) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந. காண்டீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சட்டத்தரணி ந.சிறீகாந்தா, பொது மக்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம் | 27 People Banned From Protesting In Tahiti


🛑மூன்றாம் இணைப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

திஸ்ஸ விகாரையில் இன்று (10) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்த நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சூழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் காவல்துறையினரின் நீர்த்தாரைப் பிரயோக இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம் | 27 People Banned From Protesting In Tahiti

🛑இரண்டாம் இணைப்பு 

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் (10) இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

🛑 முதலாம் இணைப்பு

யாழில் (Jaffna) தையிட்டி விகாரை முன்பு பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

போயா தினமான இன்று (10) சிங்கள மக்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்து இருந்தார்.

இதனடிப்படையில், இன்று (10) நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ் மக்களும் பெருமளவில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

காவல்துறையினர் 

இருப்பினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று (09) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தையிட்டியில் வெடித்த போராட்டம் : கலகமடக்கும் காவல்துறையினர் குவிப்பு - தொடரும் பதற்றம் | 27 People Banned From Protesting In Tahiti

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நேற்றும் (09) இன்றும் (10) போராட்டம் செய்ய வேண்டாம் என அறிவித்து இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று (10) பாதுகாப்பு சூழலை கருத்திற்கொண்டு காவல்துறையினர் பெருமளவில் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிஐடியிடம் இருந்து கருணாவுக்கு பலமுறை சென்ற அழைப்பு : அஞ்சமாட்டேன் என அறிவிப்பு

சிஐடியிடம் இருந்து கருணாவுக்கு பலமுறை சென்ற அழைப்பு : அஞ்சமாட்டேன் என அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் கரி ஆனந்தசங்கரி : திரை மறைவில் நடக்கும் பெரும் சதி

விடுதலைப் புலிகளுடன் கரி ஆனந்தசங்கரி : திரை மறைவில் நடக்கும் பெரும் சதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்