கயானாவில் கவிழ்ந்த பயணிகள் படகு: 27 பேர் பலி - 83 பேர் மாயம்!
தென் அமெரிக்கவில் கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் எயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
'எம்வி பரிமா' என்ற படகில் பயணம் செய்த பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு பிரதமர் மார்க் பிலிப்ஸ் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு நடந்த விபத்தைத் தொடர்ந்து, 15 சிறு குழந்தைகள் உட்பட 69 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகின் கேப்டன் கைது
விபத்துக்குள்ளாகிய படகில் 179 பேர் இருந்தனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அலை ஒன்று தாக்கியதால் படகு திடீரென ஒருபுறம் சாய்ந்து, சில நொடிகளில் நீரால் நிரம்பியதாக உயிர் தப்பிய ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளில் படகின் மாலுமியும் மற்றொரு குழு உறுப்பினர்களும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்துள்ளதாகக் தெரிவிக்கபட்டுள்ளது.
அவர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கயானா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில், பிரான்ஸ் இராணுவத்தைச் சேர்ந்த மூழ்காளர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவும் உதவி வருவதாகத் சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |