நெடுந்தீவில் காணாமல் போன 27 வயதுடைய இளைஞன் - எழுந்துள்ள சந்தேகம்
நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவரை காணவில்லை என நெடுந்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளதாக நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளார்.
27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும் மனநலம் குன்றிய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சந்தேகம்
இதேவேளை 14 ஆம் வட்டாரத்தில் அன்றைய தினம் கட்டப்பட்டிருந்த தெப்பம் ஒன்றும் காணாமல் போயுள்ளது.
குறித்த தெப்பத்தில் இளைஞர் தீவினை விட்டு வெளியேறியிருக்ககூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கடற்படை மற்றும் காவல் நிலையங்கள் என அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைப்பவர்கள் காவல்துறையினருக்கு அறிவிக்கும்படியும் நெடுந்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.