பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - 28 பேர் காயம்
Sri Lanka Police
Accident
Sri Lankan Schools
School Incident
schools
By Independent Writer
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (25) காலை மஹியங்கனை - திஸ்ஸபுர PTS சந்தியில் இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணை
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி