ஐக்கிய நாடுகளின் 28வது காலநிலை மாற்ற மாநாடு: பங்கேற்றுள்ள முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள்
ஐக்கிய நாடுகளின் 28வது காலநிலை மாற்ற மாநாடு இன்று (01) டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் ஆரம்பமானது.
உலகத் தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் இந்த உச்சி மாநாடு டிசம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், குறித்த மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய பிரதிநிதிக் குழுவினர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
விடுக்கப்பட்ட அழைப்பு
இந்நிலையில், அங்கு காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கு நாடுகள் எவ்வாறு திட்டமிடுகின்றன என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, காலநிலை மாற்ற மாநாட்டுடன் இணைந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சுடகாஸ் ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அதன்போது, கிரீஸ் பிரதமர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் தம்முடன் இணைந்து நாட்டுக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுத்ததாக அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |