மீள ஆரம்பிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான காரணம்!
பிடித்துவைக்கப்பட்ட அனைத்துப் பெண் பிணைக்கைதிகளை விடுவிக்காததும் இஸ்ரேலின் மேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதுமே போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாததற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுற்ற நிலையில், காஸாவில் தனது தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஆபத்தான போர் பகுதி
அதேசமயம், காஸாவின் தெற்குப்பகுதிகளில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேல் வானிலிருந்து வீசியுள்ளது.
அதில் கான் யூனிஸ் பகுதியை விட்டு மக்களை வெளியேறும்படி வலியுறுத்தியுள்ள நிலையில் 'கான் யூனிஸ் மிகவும் ஆபத்தான போர் பகுதி' எனவும் எச்சரித்துள்ளது.
போர் துவங்கிய சில மணி நேரங்களிலேயே 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயப்பட்டிருப்பதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் முடிந்தபின், கான் யூனிஸ் பகுதியில் உள்ள பெரிய கட்டிடம், காஸாவின் மத்தியப் பகுதிகள், வடக்குப்பகுதிகள் மற்றும் மகாசி பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு, கைதிகள் பறிமாற்றத்தில் இஸ்ரேல் அணைத்து சமரசங்களையும் நிராகரித்ததே போர் துவங்குவதற்குக் காரணம் என வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |