சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (2022) பெறுபேறுகளின் மீளாய்வு விண்ணப்பங்கள் இம்மாதம் 4ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து பாடசாலைகளினதும் விண்ணப்பதாரர்களின் அச்சிடப்பட்ட ஒற்றை பெறுபேறு ஆவணங்கள் அந்தந்த அதிபர்களுக்கு வழங்கப்படும் என்றும் அந்த விண்ணப்பதாரர்களின் முடிவுகளை மீளாய்வு செய்த பின்னர் பெறுபேறுகள் மீண்டும் வெளியிடப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்ததுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 தேர்வு மையங்களில் நடைபெற்றிருந்தது.
பெறுபேறுகள்
குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், (2022) இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று(01) காலை வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |