இளம் வயது நோயாளர் காவு வண்டி சாரதியை காவு கொண்டது கொரோனா
நாட்டில் இளம் வயது நோயாளர் காவு வண்டி சாரதி கொவிட் தொற்றால் உயிரிழந்த துயர சம்வமொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், 1990 சுவ செரிய இலவச நோயாளர் காவு வண்டி சேவையில் இணைந்த 29 வயதான சாரதியான மீதெனியவில் வசிக்கும் தரிந்து சந்தருவன் குமாரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸால் இறந்த சமீபத்திய சுகாதாரப் பணியாளராக இவர் உள்ளார். அவர் உயிரிழக்கும் போது நோயாளர் காவு வண்டி சேவையின் ஹோமாகம பிரிவில் பணிபுரிந்தார்.
திடீர் இதய நோய் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட பின்னர், அவர் வெள்ளிக்கிழமை (01 ஒக்டோபர்) எம்பிலிப்பிட்டிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் மீண்டும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அவர் ஞாயிற்றுக்கிழமை (03 ஒக்டோபர்) எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.