யாழில் குடும்பப் பெண் பயங்கர போதைப்பொருளுடன் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
யாழ்ப்பாணத்தில் பயங்கர ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் - சுன்னாகம் தெற்கு, கல்லாக் காட்டுவான் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணை
காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பெண் 1.8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி