வயலில் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் யானை: அதிகாரிகளுக்கு மக்களின் கோரிக்கை
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை னாவல்துறை பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் யானை ஒன்று சேற்றுக்குள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வயல்வெளியில் உள்ள சேற்றுப் பகுதியில் சிக்கியுள்ள குறித்த யானை, உயிருக்கு போராடி வருவதாகத் தெரிவிக்கும் அப்பகுதி விவசாயிகள், அதன் உயிரைக் காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யானையின் நிலை
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் குறித்த பகுதிக்குச் சென்று யானையின் நிலைமையை நேரில் ஆராய்ந்து, அதனைச் சேற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்பதற்கும் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |